அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.
"Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Arangooraan Alla Seyinum Oruvan
Purangooraan Endral Inidhu
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Though a man from virtue strays, To keep from slander brings him praise"
English Explanation (விளக்கம்):
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- அறத்துப்பால் (Virtue)
- இயல் (Group):
- இல்லறவியல் (Domestic Virtue)
- அதிகார எண்:
- 133-இல் 19
- குறள் எல்லை:
- 181 - 190
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 19: புறங்கூறாமை (Not Backbiting)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
புறங்கூறான் என்றல் இனிது.
பொருள்: ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
புறனழீஇப் பொய்த்து நகை.
பொருள்: அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
பொருள்: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
முன்னின்று பின்நோக்காச் சொல்.
பொருள்: எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
புன்மையாற் காணப் படும்.
பொருள்: அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
திறன்தெரிந்து கூறப் படும்.
பொருள்: மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
நட்பாடல் தேற்றா தவர்.
பொருள்: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
பொருள்: நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
புன்சொல் உரைப்பான் பொறை.
பொருள்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பொருள்: அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.