இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு.
"From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Desireless, greatness conquers all; Coveting misers ruined fall"
English Explanation (விளக்கம்):
To covet (the wealth of another) regardless of consequences will bring destruction That greatness (of mind) which covets not will give victory
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- அறத்துப்பால் (Virtue)
- இயல் (Group):
- இல்லறவியல் (Domestic Virtue)
- அதிகார எண்:
- 133-இல் 18
- குறள் எல்லை:
- 171 - 180
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 18: வெஃகாமை (Not Coveting)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
குற்றமும் ஆங்கே தரும்.
பொருள்: நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
நடுவன்மை நாணு பவர்.
பொருள்: நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
மற்றின்பம் வேண்டு பவர்.
பொருள்: அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
புன்மையில் காட்சி யவர்.
பொருள்: ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
வெஃகி வெறிய செயின்.
பொருள்: யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?
பொல்லாத சூழக் கெடும்.
பொருள்: அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
மாண்டற் கரிதாம் பயன்.
பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
வேண்டும் பிறன்கைப் பொருள்.
பொருள்: ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
திறன்அறிந் தாங்கே திரு.
பொருள்: அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
பொருள்: விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.