இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளக்கு மாறு.
"Although there be no fault in him, the sweetness of his loveHath power in me a fretful jealousy to move"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Illai Thavaravarkku Aayinum Ootudhal
Valladhu Avaralikku Maaru
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"He is flawless; but I do pout So that his loving ways show out"
English Explanation (விளக்கம்):
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- கற்பியல் (The Post-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 133
- குறள் எல்லை:
- 1321 - 1330
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 133: ஊடலுவகை (The Pleasures of Temporary Variance)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
வல்லது அவர்அளக்கு மாறு.
பொருள்: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
வாடினும் பாடு பெறும்.
பொருள்: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
நீரியைந் தன்னார் அகத்து.
பொருள்: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.
உள்ளம் உடைக்கும் படை.
பொருள்: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
பொருள்: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
புணர்தலின் ஊடல் இனிது.
பொருள்: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
கூடலிற் காணப் படும்.
பொருள்: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
கூடலில் தோன்றிய உப்பு.
பொருள்: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.
நீடுக மன்னோ இரா.
பொருள்: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
கூடி முயங்கப் பெறின்.
பொருள்: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.