English Tamil Thanglish
Login Register
Home திருக்குறள்
உலகப் பொதுமறை • Universal Tamil Classic 1,330 அருங்குறள்கள் 133 அதிகாரங்கள்

திருக்குறள் Thirukkural with Meanings & Images

வான்புகழ் வள்ளுவர் அருளிய 1330 திருக்குறள்கள், டாக்டர் மு. வரதராசனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் தெளிவான உரைகள், ஆங்கில விளக்கவுரை மற்றும் படங்கள்.

📜

1,330

மொத்த குறள்கள்

3

முப்பால்கள் (Sections)

133

அதிகாரங்கள் (பட்டியல்)

1330

படங்கள்

குறள்கள் பட்டியல் (250 குறள்கள்)

காமத்துப்பால் #1081
குறள் 1081 ஓவியம்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

"Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!"

பொருள்: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1082
குறள் 1082 ஓவியம்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

"The counter glances of this belle Are armied dart of the Love-Angel"

பொருள்: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1083
குறள் 1083 ஓவியம்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

"Not known before -I spy Demise In woman's guise with battling eyes"

பொருள்: எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது

இயல்: களவியல்
காமத்துப்பால் #1084
குறள் 1084 ஓவியம்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

"This artless dame has darting eyes That drink the life of men who gaze"

பொருள்: பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1085
குறள் 1085 ஓவியம்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.

"Is it death, eye or doe? All three In winsome woman's look I see"

பொருள்: எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1086
குறள் 1086 ஓவியம்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

"If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain"

பொருள்: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1087
குறள் 1087 ஓவியம்

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

"Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover"

பொருள்: மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1088
குறள் 1088 ஓவியம்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

"Ah these fair brows shatter my might Feared by foemen yet to meet"

பொருள்: போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1089
குறள் 1089 ஓவியம்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

"Which jewel can add to her beauty With fawn-like looks and modesty?"

பொருள்: பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1090
குறள் 1090 ஓவியம்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

"To the drunk alone is wine delight Nothing delights like love at sight"

பொருள்: கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1091
குறள் 1091 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

"Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart"

பொருள்: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1092
குறள் 1092 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

"Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore"

பொருள்: கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1093
குறள் 1093 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

"She looked; looking bowed her head And love-plant was with water fed"

பொருள்: என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1094
குறள் 1094 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

"I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile"

பொருள்: யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1095
குறள் 1095 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

"No direct gaze; a side-long glance She darts at me and smiles askance"

பொருள்: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1096
குறள் 1096 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

"Their words at first seem an offence But quick we feel them friendly ones"

பொருள்: புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1097
குறள் 1097 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

"Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks"

பொருள்: பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

இயல்: களவியல்
காமத்துப்பால் #1098
குறள் 1098 ஓவியம்
அதிகாரம் 110: குறிப்பறிதல்

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

"What a grace the slim maid has! As I look she slightly smiles"

பொருள்: யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

இயல்: களவியல்
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share