இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளக்கு மாறு.
"Although there be no fault in him, the sweetness of his loveHath power in me a fretful jealousy to move"
மு.வ உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.