காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.
"My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay"
English Explanation (விளக்கம்):
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- கற்பியல் (The Post-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 123
- குறள் எல்லை:
- 1221 - 1230
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 123: பொழுதுகண்டு இரங்கல் (Lamentations at Eventide)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
வேலைநீ வாழி பொழுது.
பொருள்: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
வன்கண்ண தோநின் துணை.
பொருள்: மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
துன்பம் வளர வரும்.
பொருள்: பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
ஏதிலர் போல வரும்.
பொருள்: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
மாலைக்குச் செய்த பகை?
பொருள்: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
காலை அறிந்த திலேன்.
பொருள்: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
மாலை மலரும்இந் நோய்.
பொருள்: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
குழல்போலும் கொல்லும் படை.
பொருள்: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
மாலை படர்தரும் போழ்து.
பொருள்: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
மாயும்என் மாயா உயிர்.
பொருள்: ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.