துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்.
"Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lower"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
இன்பம் தருவதற்குரிய நட்பிலேயே துன்பத்தைத் தரம் இவர், பகைமையில் என்னதான் செய்வாரோ?
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"What wilt they prove when they are foes Who in friendship bring me woes!"
English Explanation (விளக்கம்):
What will they prove when angry tempests lower?
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- கற்பியல் (The Post-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 117
- குறள் எல்லை:
- 1161 - 1170
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 117: படர்மெலிந் திரங்கல் (Complainings)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
ஊற்றுநீர் போல மிகும்.
பொருள்: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
உரைத்தலும் நாணுத் தரும்.
பொருள்: இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
நோனா உடம்பின் அகத்து.
பொருள்: துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
ஏமப் புணைமன்னும் இல்.
பொருள்: காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
நட்பினுள் ஆற்று பவர்.
பொருள்: ( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
துன்பம் அதனிற் பெரிது.
பொருள்: காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
யாமத்தும் யானே உளேன்.
பொருள்: காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
என்னல்லது இல்லை துணை.
பொருள்: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
நெடிய கழியும் இரா.
பொருள்: ( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
நீந்தல மன்னோஎன் கண்.
பொருள்: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.