பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.
"Although his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I see"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Though slighting me he acts his will My restless eyes would see him still"
English Explanation (விளக்கம்):
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- கற்பியல் (The Post-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 129
- குறள் எல்லை:
- 1281 - 1290
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 129: புணர்ச்சி விதும்பல் (Desire for Reunion)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
பொருள்: நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு
காமம் நிறைய வரின்.
பொருள்: காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
காணா தமையல கண்.
பொருள்: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
பொருள்: தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
பழிகாணேன் கண்ட இடத்து.
பொருள்: மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.
காணேன் தவறல் லவை.
பொருள்: காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
பொருள்: வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?
கள்ளற்றே கள்வநின் மார்பு.
பொருள்: கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
செவ்வி தலைப்படு வார்.
பொருள்: காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
என்னினும் தான்விதுப் புற்று.
பொருள்: கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.