நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
"As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence"
English Explanation (விளக்கம்):
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- கற்பியல் (The Post-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 122
- குறள் எல்லை:
- 1211 - 1220
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 122: கனவுநிலை உரைத்தல் (The Visions of the Night)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
யாதுசெய் வேன்கொல் விருந்து.
பொருள்: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
உயலுண்மை சாற்றுவேன் மன்.
பொருள்: கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
காண்டலின் உண்டென் உயிர்.
பொருள்: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
நல்காரை நாடித் தரற்கு.
பொருள்: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
கண்ட பொழுதே இனிது.
பொருள்: முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
காதலர் நீங்கலர் மன்.
பொருள்: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
என்எம்மைப் பீழிப் பது.
பொருள்: நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
பொருள்: தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
காதலர்க் காணா தவர்.
பொருள்: கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
காணார்கொல் இவ்வூ ரவர்.
பொருள்: நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.