தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்?
"How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap
Paidhal Uzhappadhu Evan?
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?"
English Explanation (விளக்கம்):
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- கற்பியல் (The Post-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 118
- குறள் எல்லை:
- 1171 - 1180
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 118: கண் விதுப்பழிதல் (Eyes consumed with Grief)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
தாம்காட்ட யாம்கண் டது.
பொருள்: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
பைதல் உழப்பது எவன்?
பொருள்: ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
இதுநகத் தக்க துடைத்து.
பொருள்: அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
பொருள்: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.
காமநோய் செய்தஎன் கண்.
பொருள்: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.
தாஅம் இதற்பட் டது.
பொருள்: எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
வேண்டி அவர்க்கண்ட கண்.
பொருள்: அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
காணாது அமைவில கண்.
பொருள்: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
ஆரஞர் உற்றன கண்.
பொருள்: காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
அறைபறை கண்ணார் அகத்து.
பொருள்: அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.