நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல்.
"I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Once I was modest and manly My love has now Madal only"
English Explanation (விளக்கம்):
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- களவியல் (The Pre-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 114
- குறள் எல்லை:
- 1131 - 1140
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 114: நாணுத் துறவுரைத்தல் (The Abandonment of Reserve)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
மடலல்லது இல்லை வலி.
பொருள்: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
நாணினை நீக்கி நிறுத்து.
பொருள்: (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
காமுற்றார் ஏறும் மடல்.
பொருள்: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
நல்லாண்மை என்னும் புணை.
பொருள்: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
மாலை உழக்கும் துயர்.
பொருள்: மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
பொருள்: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
பெண்ணின் பெருந்தக்க தில்.
பொருள்: கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
மறையிறந்து மன்று படும்.
பொருள்: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
மறுகின் மறுகும் மருண்டு.
பொருள்: அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
யாம்பட்ட தாம்படா ஆறு.
பொருள்: யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.