கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்.
"For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begone"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Karumaniyir Paavaainee Podhaayaam Veezhum
Thirunudharku Illai Itam
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Depart image in my pupil Giving room to my fair-browed belle!"
English Explanation (விளக்கம்):
O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- காமத்துப்பால் (Love)
- இயல் (Group):
- களவியல் (The Pre-marital love)
- அதிகார எண்:
- 133-இல் 113
- குறள் எல்லை:
- 1121 - 1130
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 113: காதற் சிறப்புரைத்தல் (Declaration of Love"s special Excellence)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
வாலெயிறு ஊறிய நீர்.
பொருள்: மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
மடந்தையொடு எம்மிடை நட்பு.
பொருள்: இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.
திருநுதற்கு இல்லை இடம்.
பொருள்: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
பொருள்: ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
பொருள்: போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.
நுண்ணியர்எம் காத லவர்.
பொருள்: எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
பொருள்: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
பொருள்: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
ஏதிலர் என்னும் இவ் வூர்.
பொருள்: கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.
ஏதிலர் என்னும் இவ் வூர்.
பொருள்: காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.