வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல் நோக்கி வாழுங் குடி.
"All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice"
English Explanation (விளக்கம்):
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- பொருட்பால் (Wealth)
- இயல் (Group):
- அரசியல் (Royalty)
- அதிகார எண்:
- 133-இல் 55
- குறள் எல்லை:
- 541 - 550
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 55: செங்கோன்மை (The Right Sceptre)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
தேர்ந்துசெய் வஃதே முறை.
பொருள்: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
கோல் நோக்கி வாழுங் குடி.
பொருள்: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
நின்றது மன்னவன் கோல்.
பொருள்: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
அடிதழீஇ நிற்கும் உலகு.
பொருள்: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
பெயலும் விளையுளும் தொக்கு.
பொருள்: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
கோலதூஉங் கோடா தெனின்.
பொருள்: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
முறைகாக்கும் முட்டாச் செயின்.
பொருள்: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
தண்பதத்தான் தானே கெடும்.
பொருள்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
வடுவன்று வேந்தன் தொழில்.
பொருள்: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
களைகட் டதனொடு நேர்.
பொருள்: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.