ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
"On no right system if man toil and strive, Though many men assist, no work can thrive"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Aatrin Varundhaa Varuththam Palarnindru
Potrinum Poththup Patum
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"Toil without a plan ahead Is doomed to fall though supported"
English Explanation (விளக்கம்):
The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- பொருட்பால் (Wealth)
- இயல் (Group):
- அரசியல் (Royalty)
- அதிகார எண்:
- 133-இல் 47
- குறள் எல்லை:
- 461 - 470
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 47: தெரிந்து செயல்வகை (Acting after due Consideration)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
ஊதியமும் சூழ்ந்து செயல்.
பொருள்: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
அரும்பொருள் யாதொன்றும் இல்
பொருள்: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.
ஊக்கார் அறிவுடை யார்.
பொருள்: பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
ஏதப்பாடு அஞ்சு பவர்.
பொருள்: இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.
பாத்திப் படுப்பதோ ராறு.
பொருள்: செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.
செய்யாமை யானுங் கெடும்.
பொருள்: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
எண்ணுவம் என்பது இழுக்கு.
பொருள்: (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
போற்றினும் பொத்துப் படும்.
பொருள்: தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.
பண்பறிந் தாற்றாக் கடை.
பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
கொள்ளாத கொள்ளாது உலகு.
பொருள்: தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.