தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்.
"Who gains himself in utter self-control, Him worships every other living soul"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"He worship wins from every soul Who Master is by soul control"
English Explanation (விளக்கம்):
All other creatures will worship him who has attained the control of his own soul
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- அறத்துப்பால் (Virtue)
- இயல் (Group):
- துறவறவியல் (Ascetic Virtue)
- அதிகார எண்:
- 133-இல் 27
- குறள் எல்லை:
- 261 - 270
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 27: தவம் (Penance)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
அற்றே தவத்திற் குரு.
பொருள்: தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்
அஃதிலார் மேற்கொள் வது.
பொருள்: தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.
மற்றை யவர்கள் தவம்.
பொருள்: துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ
எண்ணின் தவத்தான் வரும்.
பொருள்: தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
ஈண்டு முயலப் படும்.
பொருள்: விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
பொருள்: தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
பொருள்: புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்
மன்னுயி ரெல்லாந் தொழும்.
பொருள்: தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
பொருள்: தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
சிலர்பலர் நோலா தவர்.
பொருள்: ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.