பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.
"Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"With silly words who insults all Is held in contempt as banal"
English Explanation (விளக்கம்):
He who to the disgust of many speaks useless things will be despised by all
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- அறத்துப்பால் (Virtue)
- இயல் (Group):
- இல்லறவியல் (Domestic Virtue)
- அதிகார எண்:
- 133-இல் 20
- குறள் எல்லை:
- 191 - 200
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 20: பயனில சொல்லாமை (Against Vain Speaking)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
எல்லாரும் எள்ளப் படும்.
பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
நட்டார்கண் செய்தலிற் றீது.
பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
பாரித் துரைக்கும் உரை.
பொருள்: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பொருள்: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
நீர்மை யுடையார் சொலின்.
பொருள்: பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
மக்கட் பதடி யெனல்.
பொருள்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
பயனில சொல்லாமை நன்று.
பொருள்: அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள்: அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
மாசறு காட்சி யவர்.
பொருள்: மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சொல்லிற் பயனிலாச் சொல்.
பொருள்: சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.