விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.
"If from the clouds no drops of rain are shed'Tis rare to see green herb lift up its head"
மு. வரதராசனார் உரை
டாக்டர் மு.வ அவர்களின் செறிவான நற்றமிழ் உரை
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
சாலமன் பாப்பையா உரை
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடை விளக்கம்
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
கலைஞர் மு. கருணாநிதி உரை
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கிய உரை
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
English Meaning & Transliteration
English Transliteration (ஒலிபெயர்ப்பு):
Visumpin Thuliveezhin Allaalmar Raange
Pasumpul Thalaikaanpu Aridhu
English Poetic Translation (ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு):
"No grassy blade its head will rear, If from the cloud no drop appear"
English Explanation (விளக்கம்):
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen
Recent Resources
0No resources yet. Be the first to share one!
Recent Comments
0No comments yet. Be the first to share your thoughts!
அதிகாரக் குறிப்பு
- பால் (Section):
- அறத்துப்பால் (Virtue)
- இயல் (Group):
- பாயிரவியல் (Prologue)
- அதிகார எண்:
- 133-இல் 2
- குறள் எல்லை:
- 11 - 20
விரைவுச் செயல்கள்
அதிகாரம் 2: வான்சிறப்பு (The Blessing of Rain)
இவ்வதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்கள் வரிசை
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
பொருள்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
துப்பாய தூஉம் மழை.
பொருள்: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்
உள்நின்று உடற்றும் பசி.
பொருள்: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
வாரி வளங்குன்றிக் கால்.
பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
பொருள்: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
பசும்புல் தலைகாண்பு அரிது.
பொருள்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது
தான்நல்கா தாகி விடின்.
பொருள்: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
வானம் வழங்கா தெனின்.
பொருள்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
வான்இன்று அமையாது ஒழுக்கு.
பொருள்: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்
Explore All Content Categories
Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.