நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
"Lowest and meanest lore, that bids men trust secure, In things that pass away, as things that shall endure"
மு.வ உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
சாலமன் பாப்பையா: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.