English Tamil Thanglish
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் பொருட்பால் அதிகாரம் 88: பகைத்திறம் தெரிதல்
பொருட்பால் (Wealth) இயல்: நட்பியல் (Friendship) அதிகாரம் 88 / 133

பகைத்திறம் தெரிதல் Knowing the Quality of Hate (Chapter 88)

இவ்வதிகாரத்தில் குறள் 871 முதல் 880 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 871 ஓவியம்
குறள் எண்: #871 அதிகாரம் வரிசை: 1 / 10

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

"For Hate, that ill-conditioned thing not e'en in jestLet any evil longing rule your breast"

மு.வ உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

சாலமன் பாப்பையா: பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.

குறள் 872 ஓவியம்
குறள் எண்: #872 அதிகாரம் வரிசை: 2 / 10

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

"Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes"

மு.வ உரை: வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா: விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

குறள் 873 ஓவியம்
குறள் எண்: #873 அதிகாரம் வரிசை: 3 / 10

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

"Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn"

மு.வ உரை: தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

சாலமன் பாப்பையா: தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

குறள் 874 ஓவியம்
குறள் எண்: #874 அதிகாரம் வரிசை: 4 / 10

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

"The world secure on his dexterity depends, Whose worthy rule can change his foes to friends"

மு.வ உரை: பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

சாலமன் பாப்பையா: பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.

குறள் 875 ஓவியம்
குறள் எண்: #875 அதிகாரம் வரிசை: 5 / 10

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

"Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached"

மு.வ உரை: தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா: தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.

குறள் 876 ஓவியம்
குறள் எண்: #876 அதிகாரம் வரிசை: 6 / 10

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

"Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press"

மு.வ உரை: இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா: ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

குறள் 877 ஓவியம்
குறள் எண்: #877 அதிகாரம் வரிசை: 7 / 10

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

"To those who know them not, complain not of your woes; Nor to your foeman's eyes infirmities disclose"

மு.வ உரை: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.

சாலமன் பாப்பையா: நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

குறள் 878 ஓவியம்
குறள் எண்: #878 அதிகாரம் வரிசை: 8 / 10

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

"Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an end"

மு.வ உரை: செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

சாலமன் பாப்பையா: ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்‌.

குறள் 879 ஓவியம்
குறள் எண்: #879 அதிகாரம் வரிசை: 9 / 10

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

"Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, 'twill pierce the hand that plucks it thence"

மு.வ உரை: முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

சாலமன் பாப்பையா: நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

குறள் 880 ஓவியம்
குறள் எண்: #880 அதிகாரம் வரிசை: 10 / 10

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

"But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy"

மு.வ உரை: பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா: நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share