இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரக்கும் நோய்.
"Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing"
மு.வ உரை: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.
சாலமன் பாப்பையா: எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.