English Tamil Thanglish
Login Register
காமத்துப்பால் (Love) இயல்: கற்பியல் (The Post-marital love) அதிகாரம் 131 / 133

புலவி Pouting (Chapter 131)

இவ்வதிகாரத்தில் குறள் 1301 முதல் 1310 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 1301 ஓவியம்
குறள் எண்: #1301 அதிகாரம் வரிசை: 1 / 10

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

"Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove"

மு.வ உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

சாலமன் பாப்பையா: நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

குறள் 1302 ஓவியம்
குறள் எண்: #1302 அதிகாரம் வரிசை: 2 / 10

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

"A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess"

மு.வ உரை: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா: உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

குறள் 1303 ஓவியம்
குறள் எண்: #1303 அதிகாரம் வரிசை: 3 / 10

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.

"'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace"

மு.வ உரை: தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

சாலமன் பாப்பையா: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.

குறள் 1304 ஓவியம்
குறள் எண்: #1304 அதிகாரம் வரிசை: 4 / 10

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

"To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops"

மு.வ உரை: பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

சாலமன் பாப்பையா: தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

குறள் 1305 ஓவியம்
குறள் எண்: #1305 அதிகாரம் வரிசை: 5 / 10

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

"Even to men of good and worthy mind, the petulanceOf wives with flowery eyes lacks not a lovely grace"

மு.வ உரை: நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

சாலமன் பாப்பையா: நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.

குறள் 1306 ஓவியம்
குறள் எண்: #1306 அதிகாரம் வரிசை: 6 / 10

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.

"Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature"

மு.வ உரை: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

சாலமன் பாப்பையா: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

குறள் 1307 ஓவியம்
குறள் எண்: #1307 அதிகாரம் வரிசை: 7 / 10

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.

"A lovers' quarrel brings its pain, when mind afraidAsks doubtful, 'Will reunion sweet be long delayed?'"

மு.வ உரை: கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா: இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

குறள் 1308 ஓவியம்
குறள் எண்: #1308 அதிகாரம் வரிசை: 8 / 10

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.

"What good can grieving do, when none who loveAre there to know the grief thy soul endures"

மு.வ உரை: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

சாலமன் பாப்பையா: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?

குறள் 1309 ஓவியம்
குறள் எண்: #1309 அதிகாரம் வரிசை: 9 / 10

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.

"Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love"

மு.வ உரை: நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

சாலமன் பாப்பையா: நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

குறள் 1310 ஓவியம்
குறள் எண்: #1310 அதிகாரம் வரிசை: 10 / 10

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.

"Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire"

மு.வ உரை: ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

சாலமன் பாப்பையா: ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural

Share