English Tamil Thanglish
Login Register
Home திருக்குறள் அதிகாரங்கள் காமத்துப்பால் அதிகாரம் 121: நினைந்தவர் புலம்பல்
காமத்துப்பால் (Love) இயல்: கற்பியல் (The Post-marital love) அதிகாரம் 121 / 133

நினைந்தவர் புலம்பல் Sad Memories (Chapter 121)

இவ்வதிகாரத்தில் குறள் 1201 முதல் 1210 வரையிலான 10 திருக்குறள்கள், 3 விளக்க உரைகள் மற்றும் படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன.

📖
வேறு அதிகாரம் தேர்வு செய்க:
குறள் 1201 ஓவியம்
குறள் எண்: #1201 அதிகாரம் வரிசை: 1 / 10

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

"From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings"

மு.வ உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா: முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

குறள் 1202 ஓவியம்
குறள் எண்: #1202 அதிகாரம் வரிசை: 2 / 10

எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.

"How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief"

மு.வ உரை: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

சாலமன் பாப்பையா: நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

குறள் 1203 ஓவியம்
குறள் எண்: #1203 அதிகாரம் வரிசை: 3 / 10

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

"A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray"

மு.வ உரை: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

சாலமன் பாப்பையா: எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?

குறள் 1204 ஓவியம்
குறள் எண்: #1204 அதிகாரம் வரிசை: 4 / 10

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

"Have I a place within his heart!From mine, alas! he never doth depart"

மு.வ உரை: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

சாலமன் பாப்பையா: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

குறள் 1205 ஓவியம்
குறள் எண்: #1205 அதிகாரம் வரிசை: 5 / 10

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.

"Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes"

மு.வ உரை: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

சாலமன் பாப்பையா: தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

குறள் 1206 ஓவியம்
குறள் எண்: #1206 அதிகாரம் வரிசை: 6 / 10

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

"How live I yet? I live to ponder o'erThe days of bliss with him that are no more"

மு.வ உரை: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

சாலமன் பாப்பையா: அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?

குறள் 1207 ஓவியம்
குறள் எண்: #1207 அதிகாரம் வரிசை: 7 / 10

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

"If I remembered not what were I then? And yet, The fiery smart of what my spirit knows not to forget"

மு.வ உரை: ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

சாலமன் பாப்பையா: அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?

குறள் 1208 ஓவியம்
குறள் எண்: #1208 அதிகாரம் வரிசை: 8 / 10

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

"My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow"

மு.வ உரை: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

சாலமன் பாப்பையா: அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

குறள் 1209 ஓவியம்
குறள் எண்: #1209 அதிகாரம் வரிசை: 9 / 10

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

"Dear life departs, when his ungracious deeds I ponder o'er, Who said erewhile, 'We're one for evermore'"

மு.வ உரை: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

சாலமன் பாப்பையா: நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

குறள் 1210 ஓவியம்
குறள் எண்: #1210 அதிகாரம் வரிசை: 10 / 10

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

"Set not; so may'st thou prosper, moon! that eyes may seeMy love who went away, but ever bides with me"

மு.வ உரை: தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

சாலமன் பாப்பையா: திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Thirukkural